Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள்: ஈரானுக்கு சீனா கோரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள்: ஈரானுக்கு சீனா கோரிக்கை

Lankasri News 2 weeks ago

ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறந்து விடுங்கள் என்று ஈரானிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்

பிப்ரவரி 28ம் திகதி ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடங்கினர்.

இதையடுத்து பதிலடி தாக்குதலை முன்னெடுத்த ஈரான், உலக பொருளாதாரத்தின் முக்கிய கடல் வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக முடியது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போர் தாக்குதலை இரு தரப்பும் நிறுத்திக் கொண்டது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் அணு ஆயுதங்கள் தொடர்பான செயல்களை மேற்கொள்ள மாட்டோம் என்று சீனாவிடம் ஈரான் உறுதியளித்துள்ளது.

இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்த சீனா, ஹார்முஸ் ஜலசந்தியையும் உடனடியாக திறந்து விடுமாறு ஈரானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் மாகாண ஆளுநர் தேர்தலில் வேட்பாளராகியுள்ள தமிழர் விவேக் ராமசாமி

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்த தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் மேற்கொள்வது குறித்து சர்வதேச சமூகம் கவலையை பகிர்ந்து வருகிறது.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு ஈரான் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News