Dailyhunt
ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 5 இந்திய LPG கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 5 இந்திய LPG கப்பல்கள்

Lankasri News 1 month ago

ந்தியக் கொடி ஏந்திய ஐந்து LPG கப்பல்கள் தற்போது ஹார்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் சிக்கியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இக்கப்பல்களில் மொத்தம் 2.3 லட்சம் டன் சமையல் எரிவாயு உள்ளது. மேலும், இன்னொரு கப்பல் சில நாட்களில் LPG ஏற்றிவரவுள்ளது.



சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையை கடந்த Pine Gas மற்றும் Jag Vasant எனும் இரண்டு கப்பல்கள் இந்த வாரம் நியூ மங்களூர் மற்றும் கண்டாலா துறைமுகங்களை அடைய உள்ளன.

கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை அனுமதி தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா, ஹார்முஸ் நீரிணையை கடக்க எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை என்றும், இது ஒரு சர்வதேச கடல்பாதை என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமாகச் செல்லும் உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு எந்தவித கட்டணமும் விதிக்க முடியாது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தை மதிப்பீடு செய்து கப்பல்கள் இயக்கப்பட வேண்டும்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, தற்போது 20 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் உள்ளன. மத்ததை கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் தற்காலிக சிக்கல்கள் உருவாகியுள்ளன.


114 Rafale போர் விமானங்கள், 60 போக்குவரத்து விமானங்கள் வாங்க இந்தியா ஒப்புதல்

India LPG tankers, Strait of Hormuz, LPG, Indian flagged ships, Cooking gas #IndiaNews #HormuzCrisis #LPGSupply #StraitOfHormuz
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News