Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாதாம்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாதாம்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Lankasri News 1 month ago

5 Health Conditions That May Require You to Avoid Papaya- பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்ற நொதியும் உள்ளது.

தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

இருப்பினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு பப்பாளி சாப்பிடுவது உடல்நலப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கக்கூடும்.

அந்தவகையில், எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

1. கர்ப்பிணிகள்

கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் போன்ற சேர்மங்கள் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் முன்கூட்டிய பிரசவம் உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கும்.


கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள்.., என்னென்ன தெரியுமா?

2. இதயத் தாளக் கோளாறு உள்ளவர்கள்

இதயத் தாளக் கோளாறு உள்ளிட்ட இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு இதயத் தாளத்தில் பாதிப்பை ஏற்படும்.

3. லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள்

லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பப்பாளியைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில புரதங்கள் லேடெக்ஸில் உள்ள புரதங்களுடன் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு பப்பாளி சாப்பிட்ட பிறகு அரிப்பு, தும்மல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படும்.

4. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில சேர்மங்கள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இதனால் உடல் சோர்வு, சோம்பல் மற்றும் குளிரைத் தாங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அதிகரிக்கும்.

5. சிறுநீரகக் கல் உள்ளவர்கள்

சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது உடலில் ஆக்சலேட் அளவு அதிகரிக்கக்கூடும். இது கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரகக் கல் அபாயத்தை அதிகரிக்கும்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News