Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்திய மாணவர்களிடம் மோசடி: இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு

இந்திய மாணவர்களிடம் மோசடி: இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankasri News 2 weeks ago

செய்துள்ள கனேடிய அதிகாரிகள் சர்வதேச மாணவர்களிடம் 126,000 டொலர்கள் மோசடி செய்த வழக்கில் இரண்டு பேர் மீது கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.

இந்திய மாணவர்களிடம் மோசடி

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள கேம்பிரிட்ஜில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஹர்திக் தேவ் மற்றும் லண்டனில் வாழும் ஜெய்னிஷ்குமார் பட்டேல் (35) ஆகிய இருவரும், இந்திய மாணவர்களுக்கு Sarniaவிலுள்ள Lambton கல்லூரியில் கல்வி கற்க இடம் வாங்கித்தருவதாகக் கூறி அவர்களிடம் பணம் வாங்கியுள்ளார்கள்.

அவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததைப்போலவே போலியாக ஆவணங்களையும் தயார் செய்துள்ளார்கள் அவ்விருவரும்.

பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவந்துள்ளார்கள்.


கனேடிய மாகாணமொன்றில் நிகழ்ந்த பயங்கர விபத்து: நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

அதைத் தொடர்ந்து, ஹர்திக் தேவ் மற்றும் ஜெய்னிஷ்குமார் பட்டேல் ஆகிய இருவர் மீதும் மோசடி முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேவ் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

ஆனால், தேவ் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக கருதப்படும் நிலையில், அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News