இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நம் வேலைகளை பறிக்கிறார்கள் என பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மீது குற்றச்சாட்டு
இங்கிலாந்திலுள்ள கிரேட் யார்மௌத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரூப்பர்ட் லோவ் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மில்லியன் கணக்கான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நம் வேலைகளை பறிக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
நான் இப்படிக் கூறுவதால் என்னை நீங்கள் இனவெறுப்பாளர் என்று நினைத்தால் பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார் ரூப்பர்ட்.

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரிக் கட்சியான யூகே ரீஃபார்ம் கட்சியின் தலைவரான நைஜல் ஃபராஜ் தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ரெஸ்ட்டோர் பிரிட்டன் பார்ட்டி என்னும் கட்சியின் தலைவரான இந்த ரூப்பர்ட், நைஜலைவிட மோசம் என பிரித்தானிய பத்திரிகைகளே எழுதுகின்றன.
அந்த அளவுக்கு தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளது ரூப்பர்ட்டின் கட்சி.
மில்லியன் கணக்கான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நம் வேலைகளை பறிக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார் ரூப்பர்ட்.
ஆனால், உண்மை என்னவென்றால், ரூப்பர்ட்டின் கிரேட் யார்மௌத் தொகுதியில் மொத்தம் 99,750 பேர் வாழ்கிறார்கள்.
அவர்களில், 786 பேர் இந்தியர்கள், 121 பேர் பாகிஸ்தான் நாட்டவர்கள். அதாவது, கிரேட் யார்மௌத் தொகுதியின் மொத்த மக்கள்தொகையில், ஒரு சதவிகிதம் மட்டுமே இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும்!
அத்துடன், இந்த இந்தியர்கள் முதலான வெளிநாட்டவர்கள், மருத்துவம் மற்றும் முதியோரை கவனித்துக்கொள்ளும் துறைகளில்தான் அதிகம் வேலை செய்கிறார்கள்.
அந்த துறைகளில் வேலை செய்ய உள்ளூரில், அதாவது, பிரித்தானியர்கள் கிடைக்காததால், அந்த பணிகளைச் செய்ய வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளித்துள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
ஆக, ரூப்பர்ட் கூறுவதுபோல, மில்லியன் கணக்கான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் பிரித்தானியர்களின் வேலைகளைப் பறிக்கவில்லை!

