Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி எஸ் ஜானகி காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி எஸ் ஜானகி காலமானார்

Lankasri News 2 weeks ago

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி (ஜானகி அம்மா) 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

மைசூரில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் குயில் (Nightingale of South India) என அழைக்கப்படும் ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களை தனது காந்தக் குரலால் ஈர்த்தவர்.

தமிழ் சினிமாவில், எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வரிசையில் அனிருத் வரை பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதை அவர் நிராகரித்தார். தனது பங்களிப்பு மிகப்பெரியது என்பதால், பாரத ரத்னா விருதே தக்க அங்கீகாரம் என அவர் தெரிவித்திருந்தார்.

அவரது மறைவுச் செய்தி இசை உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்த அவரது இனிய குரல், இந்திய இசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News