Dailyhunt
இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- கனடா புதிய பயண எச்சரிக்கை

இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- கனடா புதிய பயண எச்சரிக்கை

Lankasri News 3 weeks ago

னடா அரசு, இந்தியாவிற்கான தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பில், இந்தியாவின் சில பகுதிகளுக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கனடிய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அந்த அறிவிப்பில், ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லை பகுதிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு சவால்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, "பாதுகாப்பு நிலைமை திடீரென மோசமடையலாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரிய நகரங்களில் கூட அரசியல் ஆர்ப்பாட்டங்கள், மத அடிப்படையிலான மோதல்கள், மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தெற்கு இந்தியா, மும்பை, டெல்லி, கோவா, கேரளா போன்ற சுற்றுலா பகுதிகள், "பொதுவாக பாதுகாப்பானவை" எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் மிகவும் பிரபலமான தனியே பயனிக்கும் (Solo Trip) இடங்களில் ஒன்றாக இருந்தாலும், சில பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

கனடா அரசு, இந்தியாவிற்குச் செல்லும் தனது குடிமக்கள், பயணத்திற்கு முன் பாதுகாப்பு நிலையை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News