Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரவில் கூட துல்லியம்: சீனாவில் விவசாய துறையில் அசத்தும் தானியங்கி டிராக்டர்கள்

இரவில் கூட துல்லியம்: சீனாவில் விவசாய துறையில் அசத்தும் தானியங்கி டிராக்டர்கள்

Lankasri News 4 days ago

சீனாவில் விவசாயத்திற்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய தானியங்கி டிராக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு தானியங்கி டிராக்டர்கள்

சீனாவில் விவசாய வேலைகளுக்கு Honghu T70 என்ற புதிய டிராக்டர் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த Honghu T70 நிலத்தை உழுவது, விதைகளை விதைப்பது மற்றும் மருந்து தெளிப்பது போன்ற பணிகளை திறம்பட செய்து வருகிறது.

CATL நிறுவனத்தின் 105kWh மின்சார பற்றரி திறன் கொண்ட இந்த Honghu T70 டிராக்டர் 90 குதிரைத் திறனை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 முதல் 7 மணி நேரங்கள் வரை பணியை செய்யக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கூட ஜிபிஎஸ் மற்றும் சென்சார்களின் உதவியுடன் தானாகவே நிலத்தை உழும் திறனுடன் இந்த டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டீசல் எரிபொருள் செலவு மற்றும் கார்பன் உமிழ்வு குறைக்கப்படுவதால் இந்த Honghu T70 என்ற புதிய டிராக்டர்களின் பயன்பாடு சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News