Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இயற்கையாக முகத்தை பொலிவாக்க உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?

இயற்கையாக முகத்தை பொலிவாக்க உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?

Lankasri News 2 weeks ago

பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அதன்படி, பீட்ரூட்டை முகத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தை இயற்கையாக பளபளப்பாக்கவும், முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.


வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது கருவளையங்களை மறையச் செய்து முகம் பொலிவடைய உதவுகிறது.

அந்தவகையில், இயற்கையாக முகத்தை பொலிவாக்க பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன்
  • தயிர்- 1 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக் முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை குறையும்.

2. தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன்
  • ஓட்ஸ் பொடி- 2 ஸ்பூன்
  • சர்க்கரை- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.


கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் எண்ணெய்.., இப்படி பயன்படுத்துங்கள்

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஸ்க்ரக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்குவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News