Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வெளிநாடு செல்ல விருப்பம்

ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் வெளிநாடு செல்ல விருப்பம்

Lankasri News 6 days ago

ஜேர்மனியில் அதிக வருமானம் ஈட்டும் மக்களில் பாதி பேர் வெளிநாடு செல்ல விருப்பம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,88,000 ஜேர்மன் குடிமக்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

Indeed வேலைவாய்ப்பு தளத்தின் ஆய்வின்படி, 6,000 யூரோவிற்கும் மேல் மாதாந்திர வருமானம் பெறும் 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளனர்.

இவர்களில் 77 சதவீதம் பேர் பல ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் முக்கிய காரணங்கள்:

அதிக வருமானம் (51%)

சிறந்த வாழ்க்கைத் தரம் (51%)

குறைந்த வரி மற்றும் சமூகக் கட்டணங்கள் (42%)

நல்ல காலநிலை (42%)

ஆனால், பதவி உயர்வு வாய்ப்புகள் போன்றவை குறைவானவர்களையே ஈர்க்கின்றன (24%).


வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன்

ஜேர்மனியில் வரி சுமை அதிகம் என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு. ஒரு ஊழியருக்காக முதலாளி செலவிடும் 100 யூரோவில், ஊழியருக்கு 50.70 யூரோ மட்டுமே கைக்கு வரும். மீதியை வரி மற்றும் சமூகக் கட்டணங்களாக பிடித்துக்கொள்ளப்படுகின்றன.

வெளிநாடு செல்ல விரும்புவோரின் விருப்ப நாடுகளில் அமெரிக்கா (14.4%), பிரித்தானியா (13.6%), சுவிட்சர்லாந்து (13.6%) முன்னிலையில் உள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளன.


ஜேர்மனியில் பாதுகாப்பு எச்சரிக்கை உயர்வு: தாக்குதல் அபாயம் அதிகரிப்பு

ஜேர்மனியில் இருந்து வெளியேறும் மக்கள் அதிகரித்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக IT, AI, Digitalisation துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலை, ஜேர்மனியின் வரி மற்றும் சமூகக் கொள்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News