Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மனியில் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 16 வயது இளைஞரை ஹெலிகாப்டரில் துரத்திப்பிடித்த பொலிஸார்

ஜேர்மனியில் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 16 வயது இளைஞரை ஹெலிகாப்டரில் துரத்திப்பிடித்த பொலிஸார்

Lankasri News 6 days ago

ஜேர்மனியின் பவேரிய பள்ளியில் தாக்குதல் நடத்திய பதின்ம வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில் தாக்குதல்

ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள வெல்ஃபென் ஜிம்னாசியம் (Welfen Gymnasium) பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

பள்ளியின் முன்னாள் மாணவர் என சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞர் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

800 மாணவர்கள் வரை படிக்கும் இந்த பள்ளிக்கு தாக்குதல்தாரி கத்தி மற்றும் துப்பாக்கியுடன் வந்ததாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரியின் துப்பாக்கி வேலை செய்யாததை தொடர்ந்து கத்தியால் பள்ளி மாணவிகளை அவர் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை குறித்தும் பொலிஸார் மதிப்பீட்டு வருகின்றனர்.


ஜேர்மனியில் 15 நோயாளிகளைக் கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

சந்தேக நபரை மடக்கி பிடித்த பொலிஸார்

தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிய இளைஞரை ஹெலிகாப்டர் உதவியுடன் பொலிஸார் தீவிரமாக தேடினர்.

இறுதியில் சந்தேக நபரான 16 வயது இளைஞரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்றொரு நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு சந்தேக நபரின் மனநலப் பாதிப்பு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News