Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மனியில் மாஸ்டர்ஸ் படிப்பு: இந்திய மாணவர்களுக்கு புதிய டிஜிட்டல் தேர்வு

ஜேர்மனியில் மாஸ்டர்ஸ் படிப்பு: இந்திய மாணவர்களுக்கு புதிய டிஜிட்டல் தேர்வு

Lankasri News 3 weeks ago

ஜேர்மனியில் மாஸ்டர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களுக்காக புதிய டிஜிட்டல் மாஸ்டர் அசெஸ்மென்ட் டெஸ்ட் (dMAT) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திறனை சரியாக மதிப்பிடும் ஒருங்கிணைந்த தேர்வு முறை

இந்த தேர்வு, மாணவர்களின் கல்வித் திறன், பகுத்தறிவு மற்றும் ஆராய்ச்சி திறனை மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் உயர் கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகரித்து வருவதால், அவர்களின் திறனை சரியாக மதிப்பிடும் ஒரு ஒருங்கிணைந்த முறையாக இந்த தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாணவர்கள் தங்கள் பாட அறிவு, ஆங்கில மொழித் திறன் மற்றும் ஆராய்ச்சி திறன் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்தே தேர்வை எழுதலாம்

இந்த தேர்வு ஓன்லைன் முறையில் நடைபெறும். மாணவர்கள் தங்கள் நாட்டிலிருந்தே இந்த தேர்வை எழுத முடியும்.

இதனால், ஜேர்மனியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விசா செயல்முறை எளிதாகும் என்றும், பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் திறனை நேரடியாக மதிப்பிட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த புதிய தேர்வு, இந்திய மாணவர்களுக்கு சர்வதேச அளவில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கும். மேலும், ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழங்கள் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் போது நேர்மனியான மற்றும் வெளிப்படையான முறையை பின்பற்ற முடியும்.

இந்த தேர்வு மூலம் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஜேர்மனியில் படிக்க விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே தயாராகி இந்த தேர்வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.


பாலஸ்தீன இனப்படுகொலைக்கு Microsoft ஆதரவு - நிறுவன ஊழியர் வெகுஜன மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News