அமெரிக்காவில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கடவுள் கொல்ல சொன்னதாக, கொலையாளியான முன்னாள் காவலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண்ணொருவர் ஓட்டப்பயிற்சியின்போது கொல்லப்பட்டதற்கு, கடவுள் தன்னிடம் கூறியதுதான் காரணம் என முன்னாள் காவலர் தெரிவித்துள்ளார்.
கொடூர கொலை
நியூயார்க் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் திகதி, கேட்டி சுவாரெஸ் என்ற 28 வயது பெண் மாரத்தான் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மனவேதனை தரும் சம்பவம்: தந்தையும் மகளும் கைது
அப்போது அவரை சையத் மொஹாசிப் (27) என்ற நபர் கொடூரமாக கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் ரைக்கர்ஸ் தீவு சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "ஒருவரைக் கொல்லுமாறு கடவுள் என்னிடம் கூறினார், அதனால் நான் அந்த ஒட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கேட்டி சுவரெஸைக் கொன்றேன்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, நான் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று கடவுள் என்னிடம் கூறினார். அப்பெண்ணை எனக்கு முன்பு தெரியாது; அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. அவர் தற்செயலாக அங்கு இருந்தார் அவ்வளவுதான்" என தெரிவித்துள்ளார்.
கடவுள் என்னிடம் அப்படி செய்ய சொன்னார்
மேலும் அவர், "முதலில் நான் இதை செய்யவில்லை என்று கூறினேன். ஆனால் இப்போது நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறேன்; ஏனெனில் கடவுள் என்னிடம் அப்படி செய்ய சொன்னார்" என சிறையில் நடத்தப்பட்ட நேர்காணலில் கூறியுள்ளார்.
மொஹாசிப் முன்னாள் கடற்படை வீரர் மற்றும் காவல் அதிகாரியாக இருந்துள்ளார். அவர் மீது பலமுறை நடத்தை சிக்கல் இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையிலும், நியூயார்க் நகரத் தொடக்கப் பாடசாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


