15 best foods to eat on an empty stomach- காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் உணவுகளைக் காலை உணவாகச் சாப்பிட வேண்டும்.
சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடிய 15 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. வெதுவெதுப்பான நீர்- காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். மேலும், இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.
2. துளசி- காலையில் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். துளசியில் உள்ள சில சேர்மங்கள் இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
3. கறிவேப்பிலை- காலையில் 5 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
4. சீரக நீர்- இரவு ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடும்.
5. இஞ்சி நீர்- ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவக்கூடும்.
6. மோர்- தயிர், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கப்படும் மோரில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளது.
7. பச்சைப்பயறு- முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரதம், நார்ச்சத்து மற்றும் சில வைட்டமின்கள் உள்ளன.
8. கொண்டைக்கடலை- இரவு முழுவதும் ஊற வைத்த கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவும்.
9. பேரிச்சம்பழம்- இரவு 3 பேரிச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் சில தாதுச்சத்துக்கள் உள்ளன.
10. கருப்பு உலர் திராட்சை- கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதை சாப்பிடுவது மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
11. பப்பாளி- காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் பப்பாயின் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவக்கூடும்.
12. முருங்கை இலை சூப்- முருங்கை இலை சூப்பில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை காலையில் சாப்பிட்டு வருவதால் உடலிற்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
13. நெல்லிக்காய்- நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.
14. வெந்தய நீர்- ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் நீருடன் சாப்பிடலாம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
15. பாதாம்- இரவு 6 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். பாதாமில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன.

