Dailyhunt
கனடா: Express Entry திட்டங்களை நிறுத்தி புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்த திட்டம்

கனடா: Express Entry திட்டங்களை நிறுத்தி புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்த திட்டம்

Lankasri News 4 days ago

னடா அரசு, தற்போதைய Express Entry குடியேற்ற திட்டங்களை நிறுத்தி, புதிய streamlined திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) வெளியிட்ட Forward Regulatory Plan 2026-2028 ஆவணத்தில் இந்த மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


போர்நிறுத்தத்திற்கு மத்தியில் திடீரெனெ ஹார்முஸில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஈரான்

தற்போது நடைமுறையில் உள்ள Federal Skilled Worker Class (FSWC), Canadian Experience Class (CEC) மற்றும் Federal Skilled Trades Class (FSTC) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.

அவற்றுக்கு பதிலாக, ஒரே புதிய வகை (single new class) அறிமுகப்படுத்தப்படும். இதில் eligibility விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்பு வழங்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

"இந்த புதிய திட்டம் கனடாவின் பொருளாதாரத்திற்கும், தொழில்களுக்கும் பல்வேறு திறமையான சர்வதேச நபர்களை ஈர்க்க உதவும். தொழில்சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அதிக பன்முகத்தன்மை கொண்ட திறமைகள் கொண்டவர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்" என IRCC கூறியுள்ளது.

இந்த மாற்றங்கள் தற்போது ஆலோசனை நிலையில் உள்ளன. 2026 வசந்த காலத்தில் (Spring 2026) பொதுமக்கள், பங்குதாரர்கள், நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் கூடுதல் விவரங்கள் IRCC இணையதளத்தில் வெளியிடப்படும்.


ஈரானுடன் கூட்டணி அமைக்கும் அமெரிக்கா: ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்

2015-இல் அறிமுகமான Express Entry, கனடாவின் முக்கிய குடியேற்ற மேலாண்மை முறையாக இருந்து வருகிறது. 2025-இல் மட்டும் 1,17,998 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், 2015-க்கு பிறகு கனடாவின் குடியேற்றக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படும்.

#CanadaImmigration #ExpressEntry #IRCC #SkilledWorkers #ImmigrationNews #CanadaPR
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News