Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.
தம்பதிக்கு அதிர்ஷ்டம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வாழும் ஒரு தம்பதிக்கு, ஒரு சிறிய தவறால் பெரிய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
78 வயதான வாஷ்டெனாவ் கவுண்டி பெண், தனது கணவருடன் ஒரு உணவகத்தில் Club Keno லொட்டரி விளையாடியபோது, எதிர்பாராத சம்பவம் நடந்தது.
தவறுதலாக...
அவர்கள் இருவரும் தனித்தனியாக டிக்கெட் வாங்கியிருந்தனர். பின்னர் மற்றொரு பார் சென்றபோது, கணவர் தவறுதலாக தனது டிக்கெட்டுக்கு பதிலாக மனைவியின் டிக்கெட்டை மீண்டும் replay செய்தார். அந்த டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07-16-19-23-25-46-55-68-74 என்ற எண்கள், Club Keno-வின் 20 எண்களில் 9 எண்களுடன் பொருந்தின.
இதன் மூலம் அவர்கள் 136,660 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.52 கோடி) பரிசை வென்றனர்.
UAE Lottery-யின் தலைமை கொண்டாட்ட அதிகாரியாக கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீ நியமனம்
"இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த பணம் எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை தளர்த்தி சுவாசிக்க உதவும்," என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தம்பதியினர், இந்த வெற்றிப் பணத்தின் ஒரு பகுதியை தங்கள் பேரக்குழந்தைகளின் கல்லூரி கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம், லொட்டரி விளையாட்டில் ஒரு தவறான நடவடிக்கையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை தரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

