Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கன்னிப் பெண்ணின் மௌனம், திருமணத்திற்கு சம்மதம்., தாலிபான் புதிய சட்டம்

கன்னிப் பெண்ணின் மௌனம், திருமணத்திற்கு சம்மதம்., தாலிபான் புதிய சட்டம்

Lankasri News 1 week ago

ரு கன்னிப்பெண் மௌனமாக இருந்தால், அது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாக கருதப்படும் என தாலிபான்களின் புதிய சட்டம் கூறுகிறது.

அப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, "Principles of Separation Between Spouses" எனப்படும் 31 பிரிவுகளைக் கொண்ட புதிய குடும்பச் சட்டத்தை அறிவித்துள்ளது.

அபுதாபி அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்., பீதியில் மக்கள்

இந்த சட்டம் திருமணம், விவாகரத்து, குழந்தை திருமணம் மற்றும் குடும்பத் தகராறுகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த சட்டத்தின் மிகுந்த சர்ச்சைக்குரிய பிரிவு என்னவென்றால், ஒரு கன்னிப் பெண் மௌனமாக இருந்தால் அது திருமணத்திற்கு சம்மதம் எனக் கருதப்படும் என்பதாகும்.

ஆனால், ஒரு ஆண் அல்லது திருமணமான பெண் மௌனமாக இருந்தால் அது சம்மதமாகக் கருதப்படாது.

இச்சட்டம் சட்டம் குழந்தை திருமணத்தையும் அனுமதிக்கிறது. தந்தை அல்லது தாத்தா, சிறுவர்களுக்கான திருமணத்தை ஏற்பாடு செய்ய அதிகாரம் பெற்றுள்ளனர்.

சமூக ரீதியாக ஏற்றதாகவும், மத ரீதியான தரங்களுக்கு ஏற்ப வரதட்சணை வழங்கப்பட்டிருந்தால், அந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், குழந்தைகள் வளர்ந்த பின் (பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்) அந்த திருமணத்தை ரத்து செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சமநிலையற்ற வரதட்சணை, பொருத்தமற்ற ஜோடி ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் செல்லுபடியாகாது என சட்டம் குறிப்பிடுகிறது.

தகாத உறவு, மதமாற்றம், நீண்டகாலம் கணவன் இல்லாதது, மற்றும் ஜிஹார் போன்ற குற்றச்சாட்டுகளில் தாலிபான் நீதிபதிகள் தலையீடு செய்ய அதிகாரம் பெற்றுள்ளனர்.

ஹார்முஸில் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் ஈரான்

இந்த சட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடுமையாகக் கட்டுப்படுத்தும் தாலிபான் அரசின் நடவடிக்கைகளில் இன்னொரு படியாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே, பெண்கள் பள்ளி, பல்கலைக்கழகம், வேலை, பயணம் மற்றும் பொதுவாழ்வில் பங்கேற்பதில் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டம் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக சர்வதேச சமூகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மொபைலுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட 5 எளிய வழிகள்

Taliban marriage law, Afghanistan women rights, Taliban virgin girl consent, Child marriage Afghanistan, Taliban family law decree, Women restrictions Taliban #TalibanLaw #Afghanistan #WomenRights #ChildMarriage #HumanRights #BreakingNews #Taliban
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News