Dailyhunt
காதலரை திருமணம் செய்த நடிகை ஜனனி - கணவர் யார் தெரியுமா?

காதலரை திருமணம் செய்த நடிகை ஜனனி - கணவர் யார் தெரியுமா?

Lankasri News 1 month ago

டிகை ஜனனிக்கு தனது காதலர் சாய் ரோஷன் ஷ்யாமுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை ஜனனி திருமணம்

அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஜனனி, அதன் பிறகு நடித்த தெகிடி படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள ஜனனி, 2வது பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.


'முட்ட கண்ண காட்டி என்ன பத்த வச்சா' - போராட்டம் படத்தின் 2-வது சிங்கிள் வெளியீடு

காதலனை கரம்பிடித்தார்

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி அவரது நீண்ட கால காதலரான சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், திருமண புகைப்படங்களை நடிகை ஜனனி வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையினர் வாழ்த்து

ரோஷன் ஷ்யாம் - ஜனனி தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் பிறந்த சாய் ரோஷன் ஷ்யாம், தனது பட்டப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். தற்போது, Spice Jet விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News