கனடாவில், 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் ஒரு மிகப்பெரிய விண்கல் குழி (Meteorite Crater) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, உலகளவில் சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான அறிவியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஜோயல் லாபோயிண்ட் என்ற ஆர்வலர், 2024-ஆம் ஆண்டு தனது விடுமுறை பயணத்திற்கான பாதையை கூகுள் மேப்ஸ் மூலம் திட்டமிடும்போது, செயற்கைக்கோள் படங்களில் ஒரு வட்ட வடிவ அமைப்பைக் கவனித்தார்.
முதலில் இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் என நினைத்த அவர், தரவுத்தளங்களை ஆராய்ந்தபோது எந்த தகவலும் இல்லை என்பதை கண்டறிந்தார்.
பின்னர், அவர் "Impact Earth" என்ற இணையதளத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். கனடாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் செயற்கைக்கோள் படங்கள், புவியியல் வரைபடங்கள் மற்றும் தள ஆய்வுகளை மேற்கொண்டு, 2025-ஆம் ஆண்டு தொலைதூர ஆய்வுப் பயணத்தில் இந்த அமைப்பை உறுதிப்படுத்தினர்.
இந்த குழி தற்போது "உஹாக்கடிக்" (Uhackatik) என அழைக்கப்படுகிறது. இது 25 கிலோமீட்டர் அகலத்திற்கு பரவியுள்ளதுடன், பல நகரங்களை விட பெரியதாகும். டெவோனியன் காலத்தில் (Devonian Period) விண்கல் தாக்கத்தால் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுக் குழு, 2026 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடைபெறும் Meteoritical Society மாநாட்டில் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட உள்ளது.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்., மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அறிவிப்பு

