ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி அரசு, வரி, நலத்திட்டம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களில் ஏற்பட்ட கடுமையான முரண்பாடுகளை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறது.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் சேன்சலராக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், அவரது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் சோசல்டெமோக்ராடிக் கட்சி (SPD) ஆகியவற்றின் ஆதரவு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
SPD தலைவர் மற்றும் நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெயில் (Lars Klingbeil), "அரசியலில் நம்பிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் நடந்த கடுமையான விவாதங்கள் கூட்டணிக்கும் அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, கூட்டணி கட்சிகள் இடையே வரி சீர்திருத்தம், நலத்திட்ட நிதி, சுகாதார சேவைகள் குறித்த விவாதங்கள் கடுமையாக நடந்தன. இதனால், அரசின் நிலைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் கடன் செலவுகள் 30 ஆண்டுகளில் உச்சம்., ஸ்டார்மருக்கு எதிராக கிளர்ச்சி
மெர்ஸ் தலைமையிலான கூட்டணி, மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில், அரசின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்படும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

