பெங்களூருவிலுள்ள பகல் நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றின் ஊழியர்கள், அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அடைப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
வாஷிங் மெஷினுக்குள் அடைக்கப்படும் குழந்தைகள்
பெங்களூருவில், வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் செல்லும் பகல் நேரக் காப்பகங்களில் ஒன்று, Capgemini பகல் நேரக் குழந்தைகள் காப்பகம்.
இந்நிலையில், குழந்தைகள் உதவி எண்ணுக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதில், Capgemini காப்பகத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆதாரமாக வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக பெற்றோர் அந்த காப்பகத்தை நம்பி அங்கு பிள்ளைகளை விட்டுச் செல்லும் நிலையில், அந்த காப்பகத்தில் பணி செய்யும் சில பெண்கள், அழும் குழந்தைகளின் அழுகையை அடக்குவதற்காக, குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு மூடியுள்ளார்கள்.
சில குழந்தைகள் குளியலறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளும், டாய்லெட்டில் பயன்படுத்துவதற்கு பயன்படும் கை ஷவரைக் கொண்டு பிள்ளைகள் வாய்க்குள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் காட்சிகளும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கணவனைக் கொல்ல செவிலியர் வேலையை பயன்படுத்திக்கொண்ட பெண்: ஒரு திடுக் செய்தி
உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அந்த காப்பகத்துக்கு விரைந்த பொலிசார், அந்த காப்பகத்தில் பணி செய்துவரும் மஞ்சுளா, விஜயலக்ஷ்மி என்னும் இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
வழக்கில் அதிரடி திருப்பம்
இந்த வழக்கில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக முதலில் ரகசிய தகவலளித்தவர் சுஜாதா என்னும் பெண்தான்.
அவர்தான் குழந்தைகள் குளியலறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியான மஞ்சுளா என்னும் பெண்ணுடன் சம்பளம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாலேயே தான் அந்த வீடியோக்களை எடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளார் சுஜாதா.
அத்துடன், சுஜாதா அந்த வீடியோக்களை கௌதம் என்பவருக்கு அனுப்ப, அவர் அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சுஜாதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் இந்த குற்றச்செயலில் சம பங்கு உள்ளதாகவும், அதற்கு போதுமான ஆதாரம் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், பொலிஸ் விசரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ள Capgemini நிறுவனம், தனது பெங்களூரு கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

