Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
லண்டன் ஹோட்டலில் இறந்து கிடந்த சவுதி இளவரசர்., வெளிச்சத்திற்கு வந்த காரணம்

லண்டன் ஹோட்டலில் இறந்து கிடந்த சவுதி இளவரசர்., வெளிச்சத்திற்கு வந்த காரணம்

Lankasri News 1 day ago

பிரித்தானியாவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சவுதி இளவரசரின் மரணத்தின் பின்னால் இருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள மரியட் ஹோட்டல் கென்சிங்டனில், 2025 நவம்பர் 25-ஆம் திகதி சவுதி அரேபிய இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் பின் அப்துல்லா பின் அப்துல்அசீஸ் பின் ஜலாவி அல் சௌத் (29) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில்

ஹோட்டல் பணியாளர்கள், 600 பவுண்டு மதிப்புள்ள அறையில் அவர் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்தனர். விசாரணை அறிக்கையில், அவரது மரணத்திற்கு காரணம் மாரடைப்பு (Cardiac Arrest) என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் அதிக அளவு மதுபானம், GHB எனப்படும் "Party Drug", கஞ்சா, Xanax மற்றும் பிற மருந்துகளை எடுத்திருந்தது தெரியவந்துள்ளது.

அவரது இரத்தத்தில் மதுபான அளவு, பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுவதற்கான சட்ட வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

மருத்துவர்கள், இந்த மருந்துகள் மற்றும் மதுபானம் சேர்ந்து உடல் நரம்பு மண்டலத்தை பாதித்து, சுவாசம் மற்றும் இதய செயல்பாட்டை குறைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில் தற்கொலை அல்லது பிறர் தொடர்பு இல்லை எனவும், இது "தற்செயலான மரணம்" (Death by Misadventure) எனவும் தீர்மானிக்கப்பட்டது.


சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா அணு ஒப்பந்தம் அறிவிப்பு

இளவரசர் முன்பு மதுபானம் மற்றும் போதை பழக்கத்திற்காக லண்டனில் உள்ள பிரையாரி மருத்துவமனையிலும், மெர்சிசைடில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றிருந்தார்.

ஆனால், சிகிச்சைக்கு பின் சில பின்தொடர் சந்திப்புகளை தவறவிட்டதாகவும், அவர் தற்கொலை ஆபத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ட்ரம்ப் அச்சுறுத்தலால் கனடா-அமெரிக்கா கூட்டு பாலம் திறப்பு விழா ரத்து

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News