Dailyhunt
லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த விமானம்: பயணிகள் சந்தித்த திகில் அனுபவம்

லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த விமானம்: பயணிகள் சந்தித்த திகில் அனுபவம்

Lankasri News 1 week ago

ண்டனிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்த பயணிகள் திகில் அனுபவம் ஒன்றை சந்தித்தார்கள்.

பயணிகள் சந்தித்த திகில் அனுபவம்

லண்டனிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெனீவா வந்தடைந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை கொட்டத் துவங்கியுள்ளது.

தரையிறங்கும் நேரத்தில் விமானத்தை மின்னல் தாக்க, விமானியால் விமானத்தை தரையிறக்கமுடியாமல் போயுள்ளது.

இரண்டாவது முயற்சியில் விமானம் பத்திரமாக தரையிறங்கினாலும், தாங்கள் சந்தித்த அனுபவம் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.


சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக 20 வயதுடையவர்களை விட 65 வயதுடையவர்கள் அதிகரிப்பு

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. என்றாலும், அந்த விமானம் உடனடியாக லண்டன் புறப்பட இயலவில்லை.

பொறியாளர்கள் விமானத்தை சோதனைக்குட்படுத்தி பிரச்சினை எதுவும் இல்லை என உறுதி செய்த பிறகே விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News