Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழக்கங்கள்.., என்னென்ன தெரியுமா?

மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழக்கங்கள்.., என்னென்ன தெரியுமா?

Lankasri News 3 months ago

பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் அன்றாட செயல்முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில், மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த 5 பழக்கங்களை தினமும் பின்பற்றினால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

என்னென்ன தெரியுமா?

கருப்பு உலர் திராட்சை- தினமும் இரவு 20 கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை அரைத்து குடிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை மென்மையாக்க உதவுகிறது.

நீர் குடிப்பது- காலையில் வெறும் வயிற்றில் 2 டம்ளர் சுடுநீர் குடிப்பதுடன், நாள் முழுவதும் 2 முதல் 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

நார்சத்து பழங்கள்- நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். பப்பாளி, கொய்யா, வெள்ளரிக்காய் போன்றவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன.



யோகா- தினமும் மலாசனம், பவனமுக்தாசனம் போன்ற ஆசனங்கள் குடலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

தூக்கம்- தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது மனஅழுத்தத்தையும் தவிர்க்க உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News