Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நோயாளி: நீதிமன்றத்தில் மருத்துவர்கள்

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நோயாளி: நீதிமன்றத்தில் மருத்துவர்கள்

Lankasri News 3 weeks ago

சுவிட்சர்லாந்திலுள்ள மன நல மருத்துவமனை ஒன்றிலிருந்து தப்பிய நோயாளி ஒருவர் நான்கு பேரை கோடாரியால் தாக்கினார்.

நீதிமன்றத்தில் மருத்துவர்கள்

இந்த சம்பவம், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. Préfargier என்னுமிடத்திலுள்ள மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய அந்த நபர் தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

ஆகவே, அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் அந்த நபரைக் குறித்து முறையாக மதிப்பீடு செய்து கண்காணிக்கத் தவறிவிட்டதாகவும், அந்த நபர் தப்பிச் சென்ற பிறகு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு: காத்திருக்கும் பிரச்சினைகள்

ஆனால், இப்படிப்பட்ட வன்முறையை முன்கூட்டியே கணிக்க இயலாது என்றும், முறைப்படியான மனநல மருத்துவ நடைமுறைகளை மருத்துவர்கள் பின்பற்றினார்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியவர் பின்னர் சிறையில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார். ஆக, மருத்துவர்கள் வாதம் சரிதானோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்த வழக்கில், ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News