Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாஸ்கோ நகரை சூழ்ந்த உக்ரைனிய ட்ரோன்கள்: 200க்கும் மேற்பட்டவை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

மாஸ்கோ நகரை சூழ்ந்த உக்ரைனிய ட்ரோன்கள்: 200க்கும் மேற்பட்டவை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Lankasri News 1 week ago

மாஸ்கோவை சுற்றி வளைத்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சூழ்ந்த உக்ரைனிய ட்ரோன்கள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய ட்ரோன்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சுற்றி வளைத்துள்ளனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை வெற்றிகரமாக ரஷ்ய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நகர மேயர் செர்ஜி சோப்யானின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.


கோமாவில் இருந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய முதல்வர் விஜய் - கண்கலங்கிய அமைச்சர் ஆனந்த்

இது தொடர்பாக மேக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கிட்டத்தட்ட 62 ட்ரோன்கள் மாஸ்கோ நகருக்கு மிக அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மீதமுள்ள உக்ரைனிய ட்ரோன்கள் மாஸ்கோ நகருக்கு வெளியே வெகுதொலைவிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோ நகரை குறி வைப்பதற்கு முன்னதாக உக்ரைனிய ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது தீவிரமான தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News