Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... பெரும்பான்மை பிரித்தானியர்கள் விருப்பம்

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... பெரும்பான்மை பிரித்தானியர்கள் விருப்பம்

Lankasri News 3 weeks ago

பிரித்தானியாவில் லேபர் அரசு பதவிக்கு வந்ததிலிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

இந்நிலையில், பிரித்தானிய மக்களில் பெரும்பாலானோரும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்புவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...

தி மிரர் பத்திரிகை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரெக்சிட்டை ரத்து செய்வதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், அதற்கு ஆதரவாக வாக்களிக்க பெரும்பான்மை பிரித்தானியர்கள் தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, பிரித்தானியர்களில் ஐந்தில் மூன்று பேர் (59 சதவிகிதத்தினர்), பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

ரஷ்யா உக்ரைனை தாக்கியதைத் தொடர்ந்து ட்ரம்ப் அதற்கு எதிர்பார்த்த அளவில் உதவாத விடயம் நேட்டோ உறுப்பினர் நாடுகளுக்கு ஏமாற்றத்தை உருவாக்கியது.

ஆக, நாளை தங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ட்ரம்ப் உதவ முன்வரமாட்டார் என்னும் எண்ணம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடன் செலவுகள் 30 ஆண்டுகளில் உச்சம்., ஸ்டார்மருக்கு எதிராக கிளர்ச்சி

அதை நிரூபிப்பதுபோல, ஜேர்மனியிலிருக்கும் தனது படைகளின் அளவை குறைக்கப்போவதாக ட்ரம்ப் கூற, ஐரோப்பா ஒற்றுமையாக நிற்கவேண்டும் என்ற எண்ணம் வலுத்துவருகிறது.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதே நம் நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.

ஆக, பிரித்தானியர்கள் பலருக்கும், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

என்றாலும், பிரெக்சிட்டுக்கு முன், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் அளவில் நிதி வழங்குகிறது.

பதிலுக்கு, பிரித்தானியாவுக்கு போதுமான அளவுக்கு நன்மை கிடைக்கவில்லை என்ற எண்ணமும் பிரெக்சிட்டுக்கு வழிவகுக்க ஒரு காரணமாக இருந்ததை மறுக்கமுடியாது.

விடயம் என்னவென்றால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் கூடுதலாக பங்கேற்க விரும்பினால், முன்போல் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா நிதி வழங்கவேண்டும் என்ற நிலை உருவாகலாம்.

சொல்லப்போனால், ஆண்டுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகள் வரை பிரித்தானியா வழங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News