Dailyhunt
மேக்ரானை மோசமாக கேலி செய்த ட்ரம்ப்: பிரான்ஸ் தரப்பு அதிருப்தி

மேக்ரானை மோசமாக கேலி செய்த ட்ரம்ப்: பிரான்ஸ் தரப்பு அதிருப்தி

Lankasri News 3 weeks ago

மெரிக்க தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொடுக்கப்படும் மரியாதையை ட்ரம்ப் மற்ற நாட்டு தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்னும் கருத்து வலுத்துவருகிறது.

மேக்ரானை மோசமாக விமர்சித்துள்ள ட்ரம்ப்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஈரான் போரில் உதவுவதற்காக உடனடியாக கப்பல்களை அனுப்புமாறு தான் மேக்ரானிடம் கேட்டதாகவும், ஆனால், மேக்ரான் இப்போது உதவ முடியாது, போர் முடிந்தபிறகு உதவுகிறோம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

விடயம் என்னவென்றால், அரசியல் நாகரீகத்துடன், பிரான்சிடம் உதவி கோரினோம், அவர்கள் உதவவில்லை என்று கூறவில்லை ட்ரம்ப்.

தேவையில்லாமல், மேக்ரானின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக கேலி செய்தார் அவர்.

நான் மேக்ரானை அழைத்தேன், மனைவியால் மோசமாக நடத்தப்படுகிறாரே, அதே மேக்ரான்தான், பாவம் அவர், அவரது தாடை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை என்று கூறிய ட்ரம்ப், நமக்கு உதவி தேவையில்லை, என்றாலும், சும்மா மேக்ரானிடம் கேட்டுப் பார்த்தேன் என்றும் கூறினார்.

அதாவது, 2025ஆம் ஆண்டு மே மாதம், மேக்ரானின் மனைவியாகிய பிரிஜிட் மேக்ரான், தன் கணவரை கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வெளியாக, இருவருக்கும் சண்டை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

அதைக் குறிப்பிடும் வகையில்தான், பாவம் மேக்ரான், அவருடைய தாடை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை என தற்போது கேலியாக கூறியுள்ளார் ட்ரம்ப்.


பிரான்ஸ் தரப்பு அதிருப்தி

ட்ரம்பின் கருத்துக்கு பிரான்ஸ் தரப்பில் அதிருப்தி உருவாகியுள்ளது. ட்ரம்பின் விமர்சனத்தால் எரிச்சலடைந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ட்ரம்பின் வார்த்தைகள் நாகரீகமான ஒருவர் பேசும் வார்த்தைகளோ, அவரது தகுதிக்கு ஏற்றவையோ அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மானுவல் பொம்பார்ட், அமெரிக்க அதிபரின் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தகாதவை என்று கூறியுள்ளார்.

மேலும், பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தின் தலைவரான யாயேல் பிரான் பிவேயும், மக்கள் போர்க்களத்தில் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள், ஒரு ஜனாதிபதி சிரித்துக்கொண்டும் மற்றவர்களைக் கேலி செய்துகொண்டும் இருக்கிறார் என்று கூறி ட்ரம்பை விமர்சித்துள்ளார்.


மொத்தத்தில், அமெரிக்க தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொடுக்கப்படும் மரியாதையை, அவர்கள் மற்ற நாட்டு தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்னும் கருத்து வலுத்துவருகிறது.

ஏனென்றால், ஒரு நாட்டின் ஜனாதிபதி என்னும் பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் விவாதிக்கவேண்டிய விடயங்களை எல்லாம், சற்றும் அரசியல் நாகரீகமின்றி, சமூக ஊடகங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் பகிர்ந்துவருகிறார் ட்ரம்ப்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News