Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

Lankasri News 3 weeks ago

மெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு பிரம்மாண்ட தாக்குதலை முன்னெடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?

அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்தும் எந்தவொரு தாக்குதல் முயற்சியிலும் அண்டை நாடுகள் பங்கேற்றால் அதற்கான "கடுமையான பதிலடி" நிச்சயம் கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதிவு செய்துள்ளார்.


தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா மற்றும் டெல் அவிவ் உடன் இணைந்து பிராந்திய நாடுகள் யாரும் ஈரானுடன் விரோத போக்கில் ஈடுபட வேண்டாம். அப்படி ஈடுபட்டால் நிச்சயம் ஈரான் அதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எடுத்துரைத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News