அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரித்ததையடுத்து, ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலி அமைத்து தங்கள் நாட்டின் முக்கிய இடங்களை பாதுகாக்க முனைந்துள்ளனர்.
மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் போன்ற இடங்களில் மக்கள் குவிந்து, மனித சங்கிலி அமைத்து அமெரிக்க தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்து வருவதாக ஈரானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம்
இளைஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த யோசனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து வந்ததாகவும், 'ஈரான் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான மனித சங்கிலி' என்ற பெயரில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் இளைஞர் மற்றும் மாணவர் உயர் கவுன்சிலின் செயலாளர் அலிரெசா ரஹிமி கூறியுள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்ப் Truth Social தளத்தில், "இன்று இரவு முழு நாகரிகமே அழிந்து போகும். நான் அதை விரும்பவில்லை, ஆனால் அது நிகழ வாய்ப்பு அதிகம். 47 ஆண்டுகளாக நடந்துவரும் ஊழல், சுரண்டல், மரணம் இன்று முடிவுக்கு வரும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஈரானின் மக்கள், "நாங்கள் எங்கள் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை காப்பாற்றுவோம்" என்று உறுதியுடன் மனித சங்கிலி அமைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, ஈரான் மக்களின் ஒற்றுமையையும், தங்கள் நாட்டை பாதுகாக்கும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் நேரடியாக தங்கள் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை
#Iran #Trump #HumanChain #USIranConflict #WorldNews #CivilisationThreat #StraitOfHormuz #BreakingNews

