Dailyhunt
மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நபர் ஒருவர் செய்த பயங்கர செயல்

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நபர் ஒருவர் செய்த பயங்கர செயல்

Lankasri News 1 week ago

ன் மனைவிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார் ஒருவர்.

மூன்றாவதும் பெண் குழந்தை?

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அசாருதின். அசாருதின் மனைவி ஃபர்ஹாத் (26).

தம்பதியருக்கு உமேரா (8), ஆயிஷா (6) என்னும் இரண்டு பிள்ளைகள்.

இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் ஃபர்ஹாத் மீண்டும் கர்ப்பமாக, இரண்டு முறை அவருக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளார் அசாருதின்.


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஃபர்ஹாத் கர்ப்பமாக, இம்முறையும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயந்த அசாருதின் கருக்கலைப்பு செய்யுமாறு ஃபர்ஹாத்தை வற்புறுத்த, அவர் இம்முறை மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆகவே, திட்டமிட்டு மனைவியையும் பிள்ளைகளையும் தனது கண்காணிப்பின் கீழிருக்கும் நீச்சல் குளம் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற அசாருதின், அவர்கள் மூவரையும் தண்ணீரில் அமிழ்த்திக் கொலை செய்துள்ளார்.

மனைவியையும் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு விபத்து என அவர் நாடகமாட, ஃபர்ஹாத்தின் தந்தை அது குறித்து சந்தேகம் எழுப்ப, பொலிசார் அசாருதீனை விசாரித்துள்ளார்கள்.

அப்போது தன் மனைவியையும் பிள்ளைகளையும் தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் அசாருதின்.

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் ஒருவர் கொலை செய்துள்ளார் என்ற விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News