Dailyhunt
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்

மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்

Lankasri News 3 weeks ago

பிரித்தானியர்கள் மூன்று நாட்களுக்கான உணவு முதலான சில விடயங்களை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த வார இறுதியில் கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனமான British Gas அறிவுறுத்தியுள்ளது.

இன்று மாலை முதல் நாளை காலை வரை பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு பனிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு பலத்த காற்றுக்கான விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், Storm Dave என்னும் புயல் ஒன்று பிரித்தானியாவைத் தாக்க இருப்பதால், வார இறுதியில் மின்தடையை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த வார இறுதியில் வானிலையை எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனமான British Gas பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


குளிர் தாக்காமல் இருப்பதற்காக, ஜன்னல்கள், கதவுகளை இடைவெளியில்லாமல் அடைத்தல், புகை எச்சரிக்கை அமைப்பு வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்தல், தூங்க உதவும் பைகள், கம்பளிகள் முதலாவற்றை தயாராக வைத்துக்கொள்தல் முதலானவை அவற்றில் அடங்கும்.

அத்துடன், மூன்று நாட்களுக்கான உணவு, எளிதில் கெடாத உணவுப்பொருட்கள் மற்றும் ஸ்னாக்ஸ், குடிநீர், மருந்துகள், டார்ச், பேட்டரிகள், மொபைல் சார்ஜர் முதலான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், வயதான மற்றும் உடல் நல பாதிப்புடைய உறவினர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை கவனித்துக்கொள்ளுமாறும் British Gas பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News