பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான நீளமான கூந்தலை பெற அரிசியை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தங்கம் போல் முகம் ஜொலிக்க உதவும் மாம்பழ பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 3 கப்
- செம்பருத்தி இலை- 5
- செம்பருத்தி பூ- 4
- விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அரிசி வெந்ததும் செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
அடுத்து இதனை ஆறவைத்து வடிக்கட்டி எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இதனைதொடரந்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர நீளமான கூந்தலை பெறலாம்.
முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள முதலமைச்சர் விஜய் | TVK

