Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

Lankasri News 11 hrs ago

Actor sivaji daughter shanthi narayanasamy passed away- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

உடல்நலக்குறைவால் காலமானார்

சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இவர்களில் மூத்தவர் சாந்தி, சிவாஜி கணேசன் தனது மகள் மீது கொண்ட பாசத்தால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது திரையரங்கிற்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.

சாந்தியின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News