Karamani Vadai Recipe In Tamil- வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
காராமணி சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைப்பது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான காராமணி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கால்சியம் சத்து நிறைந்த ராகி லட்டு.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- காராமணி- 1 கப்
- உப்பு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்கடுத்து அடுப்பில் வேனல் வைத்து சூடானதும் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.
இதற்கடுத்து வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

