Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஓய்வூதியத்தை வாங்க 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து செல்லும் பெண்

ஓய்வூதியத்தை வாங்க 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து செல்லும் பெண்

Lankasri News 8 hrs ago

த்தீஸ்கர் மாநிலத்தில் மனிதாபிமானம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

90 வயது மாமியாரை முதுகில் சுமந்து 9 கிலோமீட்டர் தூரம் நடந்து, வங்கியில் ஓய்வூதியம் பெறச் சென்ற பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி தாய்-மகன் இருவரும் மேயராக தேர்வு

இந்த சம்பம் அப்பகுதியில் உள்ள வங்கியின் அடிப்படை வசதிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

வயதான பெண்மணிக்கு வங்கியில் நேரடியாக ஓய்வூதியம் பெற முடியாததால், அவருடைய மருமகள் தன்னுடைய முதுகில் சுமந்து நீண்ட தூரம் நடந்து செய்துள்ளார்.

அப்பகுதியில் சரியான போக்குவரத்து வசதி இல்லை என்றும், காட்டுப் பாதையிலும் சில நீரோடைகளையும் கடந்து தனது மாமியாரை சுமந்து வருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

அந்த மூதாட்டிக்கு மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியம் கிடைப்பதாகவும், சில நேரம் பல மாதங்களுக்கு வழங்கப்படாமல், பின்னர் மொத்தமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வெளியாகியதும், சமூக ஊடகங்களில் பலரும் அந்தப் பெண்ணின் தியாகத்தை பாராட்டியுள்ளனர்.

அதே நேரத்தில், அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மூத்த குடிமக்களுக்கு எளிதான சேவைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம், கிராமப்புறங்களில் வங்கி சேவைகள் எவ்வாறு இன்னும் சிரமமாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

மக்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியத்தை எளிதாகப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

#India #Chhattisgarh #Pension #ViralVideo #Humanity #BankingIssues #ElderlyCare #IndiaToday

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News