Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னையில் இலங்கை தமிழ்ப்பெண் கார் ஏற்றி கொலை

சென்னையில் இலங்கை தமிழ்ப்பெண் கார் ஏற்றி கொலை

Lankasri News 3 weeks ago

சென்னையில் இலங்கை தமிழ்ப்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழ்ப்பெண் கொலை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில் நேற்றிரவு ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

பாரில் நடனமாடும் போது, இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற பெண்ணுக்கும் மற்றொரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், யான்சி பாரை விட்டு வெளியேறி தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.


மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை - அரசு திட்டம்

காரில் அந்த பெண்ணை துரத்திய கும்பல், யான்சியின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் யான்சி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காரை ஏற்றிய கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்ற நிலையில், இந்த வழக்கில் பாலகுரு என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரை ஓட்டியது சுமன் சக்திவேல் என கைதான நபர், காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News