Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா? சிக்கிய ஆதாரங்கள் - பத்திரிக்கையாளர் முத்தலீப்

செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா? சிக்கிய ஆதாரங்கள் - பத்திரிக்கையாளர் முத்தலீப்

Lankasri News 3 weeks ago

வெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த பேரம் குறித்து பத்திரிக்கையாளர் முத்தலீப் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.

செந்தில் பாலாஜி விரைவில் கைது?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணையும் சூழலில், முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக மற்றும் அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பில் இருந்து ஆளுநருக்கும் புகாரும் அளிக்கப்பட்டுளது.

அதேவேளையில், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தமிழ்நாடு காவல்துறை 8 பேரை கைது செய்துள்ளது.


தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி - பின்னணியில் கார்பரேட் நிறுவனம்

மேலும், இது திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரின் அறிவுறுத்தலின் பேரிலே நடைபெற்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியும் கைது செய்யப்படலாம் என தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக உள்ளது.

இந்த சூழலில், தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த பேரத்தின் பின்னணியில் நடந்தது என்ன?, இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா?, திமுக அளித்த தவெக மீதான குதிரை பேர புகார் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் சேர்வதன் பின்னணி என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் முத்தலீப் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News