Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுநீரக பிரச்சனைகளை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

சிறுநீரக பிரச்சனைகளை எச்சரிக்கும் 5 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

Lankasri News 2 months ago

மது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.

மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவகையில், சிறுநீரக பிரச்சனைகளை எச்சரிக்கும் 5 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?

முகத்தில் வீக்கம்- சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது உடலில் நீர் மற்றும் சோடியம் அதிகமாக தேங்கும். இதனால் காலை எழுந்ததும் முகம், குறிப்பாக கண் சுற்றுப் பகுதி வீக்கமாக காணப்படும்.

குமட்டல் உணர்வு- சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் யூரியா போன்ற நச்சுக்கள் அதிகரிக்கும். இதனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படும்.


முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் இயற்கை வைத்தியம்.., எப்படி தயாரிப்பது?

சிறுநீரில் நுரை காணப்படுதல்- அடர் மஞ்சள் நிறம் அல்லது இரத்தம் கலந்து வருதல் போன்றவை சிறுநீரக பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள்.

கீழ் முதுகு வலி- சிறுநீரக கற்கள் அல்லது தொற்று இருந்தால் கீழ் முதுகுப் பகுதியில் கூர்மையான வலி ஏற்படும்.

சரும வறட்சி மற்றும் அரிப்பு- சிறுநீரகங்கள் நச்சுக்களை வெளியேற்ற முடியாத போது, அவை இரத்தத்தில் சேர்ந்து சரும வறட்சி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News