சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை பட்டியலில், இந்தியா கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
சுற்றுசூழல் ஆரோக்கிய தரவரிசை
சுற்றுசூழல் ஆரோக்கியம் என்ற நோக்கத்தில், ஏல் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு தரவரிசைப் பட்டியலை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
இதில், காற்றின் தரம், சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு, மரங்களின் அடர்த்தி இழப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு உள்ளிட்ட 47 குறிகாட்டிகளின் அடிப்படையில் 177 நாடுகளை மதிப்பீடு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு அடிப்படையில், 100க்கு 74.79 மதிப்பெண்களுடன் எஸ்டோனியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
74.24 மதிப்பெண்களுடன் லக்சம்பர்க் 2வது இடத்திலும், 71.51 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 3வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் பின்லாந்து 4வது இடத்திலும், 71.04 மதிப்பெண்களுடன் நெதர்லாந்து 5வது இடத்திலும், உள்ளது.
பிறந்தநாளை வைத்து தேர்வு செய்த லொட்டரி எண் - ரூ.78 கோடி வென்ற இந்தியர்
ஜெர்மனி 6வது இடத்திலும், பிரான்ஸ் 7வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 15வது இடத்திலும், அவுஸ்திரேலியா 25வது இடத்திலும், அமெரிக்கா 27வது இடத்திலும், கனடா 29வது இடத்திலும் உள்ளது.
கடைசிக்கு முந்தைய இடத்தில் இந்தியா
39.58 மதிப்பெண்களுடன் இலங்கை 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 38.8 மதிப்பெண்களுடன்134வது இடத்தில் இருந்துள்ளது.
இதே போல், இந்த பட்டியலில் 22.46 மதிப்பெண்களுடன் இந்தியா கடைசிக்கு முந்தைய இடமான 176வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 180 நாடுகள் இருந்த நிலையில், 27.6 மதிப்பெண்களுடன் 176வது இடத்தில் இருந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில், 25.5 மதிப்பெண்களுடன் 179வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது 29.03 மதிப்பெண்களுடன் 157வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
லாவோஸ் 21.78 மதிப்பெண்களுடன் 177வது இடத்தில் கடைசி நாடாக உள்ளது.

