Dailyhunt
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு

Lankasri News 2 weeks ago

மெரிக்க போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில் அதன் விமானிகளை ஈரானிய இராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை வெள்ளிக்கிழமை கூடுதல் பதற்றத்தை எட்டியுள்ளது.

ஈரானிய இராணுவத்தினர் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பது இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஈரானிய எல்லைக்குள் அமெரிக்க இராணுவத்தின் 31.1 மில்லியன் டொலர் மதிப்புள்ள அதிநவீன F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவரை அமெரிக்கா சிறப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் மற்றொரு அமெரிக்க வீரரின் நிலைமை இன்னும் தெரியவரவில்லை.

காணாமல் போன விமானியை தேடும் பணியில் ஈடுபட்ட பிளாக் ஹாக்(Black Hawk) ஹெலிகாப்டர்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் அவை பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளன.


உக்ரைனை குறிவைத்த 26 ஏவுகணைகள், 500 ட்ரோன்கள்: 20 இலக்குகள் மீது தாக்குதல்

அதே நேரத்தில் அமெரிக்காவின் A-10 Warthog ரக விமானம் குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

A-10 Warthog ரக விமானத்தில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினார்.

பரிசு தொகை அறிவித்த ஈரான்

இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானத்தின் விமானி குறித்து தகவல் அல்லது அவரை உயிரோடு பிடித்து தருபவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு தொகை வழங்கப்படும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்காக போரை தொடங்கிய அமெரிக்கா தற்போது அதன் விமானியை தேடி அழைந்து வருவதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கிண்டல் அடித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News