Dailyhunt
தமிழகத்தின் மிகச் சிறிய மாவட்டம்.., எது தெரியுமா?

தமிழகத்தின் மிகச் சிறிய மாவட்டம்.., எது தெரியுமா?

Lankasri News 1 month ago

மிழ்நாடு பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.

1956ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

நிர்வாக வசதிக்காக தற்போது அவை 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 6,266 சதுர கிலோமீட்டர் ஆகும்.

அதேபோல், தமிழ்நாட்டில் மிகச் சிறிய மாவட்டம் சென்னை மாவட்டம் ஆகும்.

மாநிலத்தின் தலைநகரமாக இருந்தாலும், இதன் பரப்பளவு சுமார் 1,189 சதுர கிலோமீட்டர் மட்டுமே.

சென்னை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடலும், மற்ற பகுதிகளில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரை சென்னையில் அமைந்துள்ளது.

இது வங்காள விரிகுடாவை ஒட்டி சுமார் 13 கி.மீ. நீளத்தில் பரவி இருக்கும் உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும்.

பொருளாதார மையமாக விளங்கும் சென்னை, வேலை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குடியேறும் முக்கிய நகரமாக உள்ளது.

மேலும், சென்னை சர்வதேச விமான நிலையம் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை மற்றும் எண்ணூர் ஆகிய இரண்டு முக்கிய துறைமுகங்களும் இங்கு உள்ளன.

சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள் மூலம் இந்தியாவின் பல நகரங்களுக்கும் ரயில் சேவை கிடைக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் இரண்டாவது சிறிய மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. இதன் பரப்பளவு 1,729.27 சதுர கிலோமீட்டர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News