Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி: கடைசி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த ஈரான்

திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி: கடைசி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த ஈரான்

Lankasri News 1 month ago

ஹார்முஸ் ஜலசந்தி திருந்து இருக்கும் என்று ஈரான் அறிவித்து இருந்தாலும் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

மீண்டும் திறக்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தி

இஸ்ரேல்-லெபனான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து, பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு இணங்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரானிய புரட்சிகர காவல் படையினரின் அனுமதியை பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் கப்பல்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க ஸ்டார்மரும் மேக்ரானும்... கண்ணிவெடிகளை அகற்ற திட்டம்

அத்துடன் இராணுவ கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க தடை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நிபந்தனைகள் "புதிய ஒழுங்கு" என ஈரான் குறிப்பிட்டு இருப்பதோடு, போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் ஒத்துப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் வணிக கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி எப்போதும் திறந்து இருக்கும் என்றும் அமைச்சர் அப்பாஸ் அராக்சி விளக்கியுள்ளார்.

டிரம்ப் பதிவு

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் ஜலசந்தி திறக்கப்பட்டுவிட்டது, கப்பல்கள் போக்குவரத்திற்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. "நன்றி" என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News