Dailyhunt
தித்திக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமுன்.., எப்படி செய்வது?

தித்திக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமுன்.., எப்படி செய்வது?

Lankasri News 3 weeks ago

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்புதான் இந்த குலாப் ஜாமுன்.

அந்தவகையில், தித்திக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


உடலிற்கு சத்தான கருப்பு சுண்டல் வடை.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • சர்க்கரைவள்ளி கிழங்கு- 2
  • பால் பவுடர்- 1 கப்
  • நெய்- 2 ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • சர்க்கரை- 1 கப்
  • தண்ணீர்- 1 கப்
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
  • குங்குமப்பூ- 3 இதழ்

செய்முறை

முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.

பின் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கில் பால் பவுடர் மற்றும் நெய் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அடுப்பில் வாணல் வைத்து சூடானது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

பின்னர் பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக பொரித்த உருண்டையை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து எடுத்தால் சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமுன் தாயர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News