சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மால்புவாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் மால்புவா இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நாவூறும் சுவையில் பன்னீர் பாப்கார்ன்.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- மைதா- 1 கப்
- ரவை- 2 ஸ்பூன்
- சர்க்கரை- 2 ஸ்பூன்
- பால்- 1 லிட்டர்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- சோம்பு- ¼ ஸ்பூன்
- குங்குமப்பூ- 4
- இதழ் பால் பவுடர்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மைதா, ரவை, சர்க்கரை, அரை கப் பால், ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தோசை மாவு போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதில் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி கெட்டியானதும் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
இதறகடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்த மாவை ஊற்றி வட்டமாக ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுத்துக்கொள்ளவும்.

