இந்த சுவையான நுங்கு பாலை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான நுங்கு பால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கறிவேப்பிலை சட்னி.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- ஏலக்காய்- 4
- நுங்கு- 10
- பால்- ½ லிட்டர்
- சர்க்கரை- 200g
- முந்திரி- 5
- பாதாம்- 5
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், நுங்கு மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இவற்றில் ஒரு டம்ளரில் ஊற்றி அதில் ஐஸ் கட்டி சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதில் நுங்கு துண்டுகள், நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து கலந்தால் சத்தான நுங்கு பால் தயார்.

