Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தித்திக்கும் சுவையில் சிவப்பு அவல் கேசரி.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் சிவப்பு அவல் கேசரி.., எப்படி செய்வது?

Lankasri News 14 hrs ago

கேசரி என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சிகப்பு அவல் கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான Dry fruit milkshake.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • சிவப்பு அவல்- 1 கப்
  • வெல்லம்- 200g கப்
  • நெய்- ½ கப்
  • முந்திரி- 15
  • ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு வாணலில் சிவப்பு அரிசி அவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இவற்றை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலில் 2 கப் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் வடிகட்டிய வெல்லம் மற்றும் அரைத்த அவலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக்கொள்ளவும்.

பின்னர் இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கெட்டியாகும்வரை நன்கு கிளறிக்கொள்ளவும்.

இறுதியாக இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிவப்பு அரிசி அவல் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News