Dailyhunt
தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டை.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டை.., எப்படி செய்வது?

Lankasri News 1 month ago

ந்த சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டையை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி பூரி.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • வெல்லம்- 1 கப்
  • தேங்காய்- 1
  • ஏலக்காய்- 4
  • நெய்- 2 ஸ்பூன்
  • முந்திரி- 10

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து சுடுதண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்தது கொதித்ததும் மாவு உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேகைவைக்கவும்.

பின்னர் இதில் அரைத்த தேங்காய் பால் மற்றும் கரைத்த வெல்லம் சேர்த்து 10 கொதிக்கவைக்கவும்.

இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் இறக்கினால் சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News