இந்த சுவையான தேங்காய் பாயசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் பாயாசத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தித்திக்கும் சுவையில் தேங்காய் மிட்டாய்.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1
- முந்திரி- 15
- பாதாம்- 15
- திராட்சை- 15
- பால்- 1 லிட்டர்
- சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காய் துண்டுகளை எடுத்து அடுத்து நன்கு துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.

அடுத்து பாலில் துருவிய தேங்காய், நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், திராட்சை சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இதனைதொடரந்து இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கொதிக்க வைக்கவும்.

