Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் வலுவிற்கு சத்தான கம்பு பணியாரம்.., எப்படி செய்வது?

உடல் வலுவிற்கு சத்தான கம்பு பணியாரம்.., எப்படி செய்வது?

Lankasri News 1 week ago

ம்பில் உடலிற்கு நன்மைகள் வழங்கும் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

அன்றாடம் கம்பை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் நம் உடல் எடை குறையும் மற்றும் உடல் நன்கு வலுபெறும்.

அந்தவகையில், உடல் வலுவிற்கு சத்தான கம்பு பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் சத்தான உளுந்து பாயாசம்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • கம்பு- 1 கப்
  • உளுந்து- ¼ கப்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • கடுகு- ½ ஸ்பூன்
  • உளுந்து- ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • வெங்காயம்- 1
  • பச்சைமிளகாய்- 1

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு சேர்த்து நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த உளுந்து மற்றும் கம்பை தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் இவற்றை மாவில் கலந்து பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சத்தான கம்பு பணியாரம் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News